வீட்டு ஃபிரிட்ஜை திறந்து பார்த்த 5 வயது சிறுமி மரணம்.. எங்கும் பார்க்காத கொடூரம்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மின்சாரம் பாய்ந்து, ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நந்தவன மேட்டூர் நேதாஜி தெருவை சேர்ந்த தம்பதி, கவுதம்-பிரியா. இவர்களது ஐந்து வயது மகள் ரூபாவதி, வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, சிறுமி மயங்கி விழுந்தார். சிறுமியை, ஆவடி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். சிறுமி, ஏற்கனவே உயிரிழந்தது பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து, ஆவடி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story