காரில் சிக்கிய கோடி கணக்கான பணம் - சென்னையில் பரபரப்பு
சென்னை அபிராமபுரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு சென்ற ஒரு கோடியே 82 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருவல்லிக்கேணியில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்க பணம் எடுத்து செல்லப்பட்டது. கருவூல அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி அந்த பணம் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. முன்னுக்குபின் முரணாக பதிலளித்த ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story