சென்னை இளைஞர்களை நடுங்கவிடும் ECR வீடியோ.. சிதறிய உணவு டெலிவரி ஊழியரை வீடியோ எடுத்த உயிர் நண்பன்

x

சென்னை இளைஞர்களை நடுங்கவிடும் ECR வீடியோ.. சிதறிய உணவு டெலிவரி ஊழியரை வீடியோ எடுத்த உயிர் நண்பன்

தீபாவளியன்று அதிகாலை 1 மணியளவில், ஈஞ்சம்பாக்கம் ஈசிஆர் சாலையில் தான், மனதை பதை பதைக்க வைக்கும் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது..

இப்படி R15 பைக்கில் அசுரவேகத்தில் வந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவற்றில் மோதி இழுத்து வீசப்படுள்ளார்...

இவர், அடையாறு பகுதியைச் சேர்ந்த வசந்த் என்பவர் என்பதும் இவர் தலைக்கவசம் அணியாமல் இருந்ததும் தெரியவந்திருக்கிறது...

இதை அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த நண்பர்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்திருந்தார். தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது...

இந்த பைக் ரேஸில், மொத்தம் 7 நண்பர்கள் இணைந்து ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.. இதனால், வசந்த் பரிதாபமாக உயிரிழந்திருப்பதும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்