உடலில் போதை ஊசி செலுத்திய இளைஞர்கள் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

x
  • சென்னை, கொடுங்கையூரில் உடலில் போதை ஊசி செலுத்தியதால், மயக்கமடைந்த மூன்று இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
  • கொடுங்கையூர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர், பிரசாந்த். 26 வயதாகும் இவர், அதேப் பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்த்து கொடுங்கையூர் எழில் நகர் ரயில்வே ட்ராக் அருகே உடலில் போதை ஊசி செலுத்தி உள்ளார். இதை அடுத்து வீட்டிற்கு வந்த பிரசாந்த்.. இரவு 12 மணியளவில் உடல்நிலை மோசமாகி மயங்கி விழுந்தது குடும்பத்தாரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. உடனே, சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதேபோல உடலில் போதை ஊசி செலுத்திக் கொண்ட அவரது நண்பர்கள் நிதிஷ்குமார், ராஜேஷ் ஆகியோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தில், போதை ஊசி எங்கிருந்து வந்தது ?, வேறு யாரேனும் இதே போல் பயன்படுத்தியுள்ளனரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்