சிறுமியை சிதைத்த... அத்தை எனும் மிருகம்... தந்தை தலையில் இறங்கிய இடி சென்னை பதற வைத்த கொடூரம்
வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமி கர்ப்பமடைந்த விவகாரத்தில், சிறுமியின் அத்தை உட்பட 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில், பள்ளியில் படித்து வந்த சிறுமி ஒருவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்படவே, அவரது தந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளார். அப்போது, சிறுமி கர்ப்பமாக இருப்பதும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் கூற, தந்தை அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியிடம் விசாரித்தபோது, தந்தையைின் தங்கையே சிறுமியை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளியது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கோயம்பேட்டில் உள்ள அத்தை வீட்டிற்கு சிறுமி சென்றபோது, அத்தை தனது தோழிகள் இருவருடன் சேர்ந்து, சிறுமியை பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சிறுமியின் அத்தை மற்றும் அவரது தோழிகளான துர்கா, காயத்ரி ஆகியோரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். முன்னதாக, பாலியல் தொழிலில் மகளை ஈடுபடுத்தியதற்காக, சிறுமியின் அத்தையை அழைத்து தந்தை தாக்கியதற்காக, விசாரணை மேற்கொள்ளாமல் கண்ணகி நகர் போலீசார் தன்னை கைது செய்து சிறையில் அடைத்ததாக, கோயம்பேடு காவல்நிலையத்தில் தந்தை அளித்தார். அதன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்