காதலர்கள் போனில் பேசும் போது யாரும் தொந்தரவு செய்யாதீங்க - "உயிரே போயிடும்"

x

சென்னை திருவான்மியூர் பகுதியில் மணிப்பூரைச் சேர்ந்த கைசுஅலின்,பௌமின்லியன் ஆகிய இருவரும் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று பௌமின்லியன் அவரது காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது காதலியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரத்தில் சத்தமாகப் பேசி இருக்கிறார். இதனால் அருகில் தூங்கிக் கொண்டிருந்த கைசுஅலின் பௌமின்லியனை அறையை விட்டு வெளியே சென்று பேசுமாறு கூறி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பௌமின்லியன் அருகில் கிடந்த கத்தரிக்கோலால் கைசுஅலினை குத்தியதில் படுகாயம் அடைந்து மயங்கி இருக்கிறார். உடனடியாக கைசுஅலினை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார் பௌமின்லியன். ஆனால் கைசுஅலின் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் பௌமின்லியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்