ஆந்திராவில் இருந்து ரயில் ஏறி வரும் கும்பல்.. சென்னையின் முக்கிய இடங்களுக்கு ஸ்கெட்ச் - ரொம்ப உஷார்

x

ஆந்திர மாநிலத்தில் இருந்து, குடும்பமாக வந்து, சென்னையில் திருடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அதுபற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

சென்னை சௌகார்பேட்டையில் இரு தினங்களுக்கு முன் சாலையில் நடந்து சென்ற பூஜா தேவி என்பவரின் ஹேன்ட்பேக்கை அறுத்து, அதில் இருந்த 12 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

மறுநாள், வசந்தகுமாரி என்பவரின் ஹேன்ட்பேக்கை அறுத்து, 13 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றுள்ளனர். பணத்தை பறிகொடுத்த இருவரும், யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, உடனடியாக களத்தில் இறங்கியது காவல் துறை. சம்பவ இடங்களில் இருந்து கைப்பற்றிய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பெண்கள் கும்பலாக சூழ்ந்து கொண்டிருந்த நேரம் பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது.

அந்த கும்பல் ஒரு ஆட்டோவில் ஏறிச் சென்றதை சிசிடிவி காட்சியில் பார்த்த போலீசார், பதிவு எண்ணை வைத்து, ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரித்தபோது, அவர்களை பெரியமேடு பகுதியில் இறக்கி விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக பெரியமேடு சென்ற போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த கும்பல், திருவேங்கடம் தெருவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் இருந்து பைகளுடன் வெளியே செல்வதற்கு தயார் நிலையில் இருந்த 5 பெண்கள் உள்பட 8 பேரை கொத்தாக கைது செய்தனர்.

அவர்களை அழைத்து விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தன. பிடிபட்ட அனைவரும் ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய். தந்தை, மகள், மகள், சகோதரி என்பதும் விசாணையில் தெரியவந்தது.

சென்னைக்கு ரயிலில் வரும் இவர்கள், மருத்துவ சிகிச்சை பெற வந்திருப்பதாக கூறி, திருவல்லிக்கேணி, பெரியமேடு பகுதிகளில் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்குகிறார்கள். பின்னர் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் தியாகராய நகர், சௌகார்பேட்டை, புரசைவாக்கம் ஆகிய இடங்களுக்கு சென்று ஹேன்ட்பேக்குடன் வரும் பெண்களை குறிவைத்து, தங்கள் கைவரிசையை காட்டி வந்துள்ளனர்.

குறிப்பாக ஹேன்ட்பேக்குடன் வரும் ஒரு பெண்ணை நான்கு பெண்கள் சூழ்ந்து நெருக்கமாக நின்று கொண்டிருக்கும்போது, அவருக்கு பின்னால் நிற்பவர் ஹேன்ட் பேக்கை பிளேடால் அறுத்து, பர்சை எடுத்து வேறு ஒருவரிடம் கொடுத்து விடுவார். இவை அனைத்தும் யாருக்கும் சந்தேகம் வராத வகையில், ஒரு நொடிப்பொழுதில் நடந்து முடிந்து விடும். இதுபோன்று, ஆந்திர கும்பலிடம் 13 ஆயிரம் ரூபாயை இழந்ததாக பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்