அக்கிரமத்திற்கு எதிராக துணிந்த சென்னை பெண்... வீடுதேடி வந்து விழுந்த குண்டு - அடுத்து நடந்த அதிரடி

x

சென்னை டி பி சத்திரம் ஜோதி அம்மாள் நகரைச் சேர்ந்த

அமுதா என்பவர், அந்த பகுதியில் கஞ்சா விற்பனை

நடைபெறுவதைப் பற்றி டி பி சத்திரம் காவல் நிலையத்திற்கு

தகவல் கொடுத்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஜண்டா என்ற சந்தோஷ் என்பவன் ஞாயிறு இரவு நேரத்தில் மூன்று பேருடன் சென்று அமுதாவின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில், அமுதா மற்றும் அவரது சகோதிரி உயிர் தப்பினர். அமுதா அளித்த புகாரின் அடிப்படையில் ஜண்டா சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் மனோஜ் ஆகியோரை டிவி சத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்