சென்னை சாலைகளில் தாண்டவமாடிய மாடுகள் இப்போ எங்கே? கொத்தாக தூக்கி என்ன செய்கிறது மாநகராட்சி?

x

சென்னை சாலைகளில் தாண்டவமாடிய மாடுகள் இப்போ எங்கே? கொத்தாக தூக்கி என்ன செய்கிறது மாநகராட்சி?

சாலையில் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துகளையும், மரணங்களையும் கட்டுப்படுத்த மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

அண்மை காலமாக சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்..

குறிப்பாக சென்னையில், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவதே பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில், பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

மாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, சாலைகளில் மாடுகளை திரிய விடும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது..

அதன் படி, சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் முதல் முறையாக பிடிப்பட்டால் 5 ஆயிரம் ரூபாயும், மீண்டும் பிடிக்கப்பட்டால், 10 ஆயிரம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படுகிறது.

இதை மீறி மாடுகளை சாலையில் திரிய விட்ட உரிமையாளர்களிடமிருந்து ரூ.85 லட்சத்து 69 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிடிபடும் மாடுகளை பராமரிப்பதற்கு பல கட்ட வழிமுறைகளை கையாண்டு வருகிறது மாநகராட்சி..

இதற்கான செலவுகளையும் மாநகராட்சியே ஏற்பதாக கூறுகிறார் கால்நடை துணை மருத்துவர் பரத்.

இந்த நடைமுறைகளால், மாநகராட்சி ஊழியர்கள் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கிறார் மாடு பராமரிப்பாளர் மனோஜ்..

பிடிக்கப்படும் மாடுகள் புதுப்பேட்டை மற்றும் பெரம்பூர் ஜமாலயா உள்ளிட்ட இடங்களில் பாதுகாக்கப்படும்..மாட்டின் உரிமையாளர்கள் தண்டத் தொகையை கட்டியதும் மாடுகளை அழைத்து செல்லலாம் இல்லையெனில் மாடுகள் ப்ளூகிராசிடம் ஒப்படைக்கப்படும் என்கின்றனர்..

இப்படி பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகும் மாடுகள் சாலையில் திரிவது தொடர்கதையாகி வருவதால், மாடு உரிமையாளர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் மாட்டுத் தொழுவங்களுக்கு உரிமம் பெறுவது அடுத்த மாதம் முதல் கட்டாயமாக்கப்படுகிறது.

மாமன்ற கூட்ட இது தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் நாள் தோறும் தீவிர கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகராட்சி சார்பில் பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் காயம் ஏற்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க முன் வர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது..


Next Story

மேலும் செய்திகள்