சென்னை மக்களுக்கு வந்த குட் நியூஸ் | CHENNAI

x

2006-2011 திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது கூவம் நதியை சீரமைக்க, அமெரிக்காவின் சான் ஆண்டனியோ மாகனத்துடன் சகோதர ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக ஆட்சியில் திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், சமீபத்தில் மேயர் பிரியா அமெரிக்கா சென்ற ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. அப்போது சான் ஆண்டனியோவில் நதியை மீட்டெடுத்து சுற்றுலா தளமாக மாற்றியதை போல், கூவத்தையும் சீரமைக்க ஆய்வு செய்து அறிக்கை வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக சர்வதேச சுற்றுசூழல் மேம்பாடு மற்றும் அறிவியல் விவரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஜெனிபர் லிட்டில் ஜான், அமெரிக்க துணை தூதர் கிறிஸ் ஹொட்ஜாஸ் உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் சென்னை வந்துள்ளனர். அவர்களுடன் ஆலோசித்த மேயர் பிரியா, கூட்டாக கூவம் நதியை பார்வையிட்டார். முதல்வரின் கனவுத் திட்டமான கூவம் நதி மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்