"ரூமுக்கு கூப்பிட்டு அசிங்கமாக பார்க்கிறார்.." - சென்னை கல்லூரி மாணவி சொன்ன அதிர்ச்சி தகவல்
சென்னை, காரப்பாக்கத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இணை பதிவாளராக பணியாற்றி வருபவர் மோகன். இவர் மீது, இதே பல்கலைக்கழகத்தில் பி.ஹெச். டி முதலாமாண்டு பயின்று வரும் மாணவி ஒருவர் பாலியல் புகாரளித்துள்ளார். குறிப்பாக, மோகன் தன்னை பற்றி அவதூறு விளைவிக்கும் விதமாக பேசுவதாகவும், தன்னை அவரது அறைக்கு அழைப்பதாகவும் அம்மாணவி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகார் கடிதம், பல்கலைக்கழக பெண்கள் பாதுகாப்பு ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Next Story