சென்னையில் 22 வயதில் மாரடைப்பு.. காலேஜ் சேர்ந்த 15ம் நாளில் சோகம்.. பேச்சுலர்களுக்கு எச்சரிக்கை

x

படிப்பிற்காக சொந்த ஊரில் இருந்து சென்னை வந்த இளைஞருக்குதான் இந்த விபரீதம்...

கல்லூரியில் சேர்ந்த 15 ஆவது நாளே, தனது தோழிகளுடன் அவுட்டிங் சென்ற அவருக்கு, தோழிகள் கண்முன்னே நேர்ந்திருக்கும் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

நடனத்திற்கு நடுவே பப்பில் வழங்கபட்ட உணவை சாப்பிட்டதாக தகவல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் முகமது சுகைல்....

22 வயது இளைஞரான இவர், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 15 நாள்களுக்கு முன் எம்.பி.ஏ பிரிவில் சேர்ந்திருக்கிறார்...

கல்லூரி விடுதியிலே தங்கி பயின்று வந்த சுகைல், சம்பவத்தன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பப் ஒன்றில்... தன் தோழிகளுடன் சென்று நடனமாடியதாக கூறப்படும் நிலையில், இங்குதான் அந்த விபரீதம் அரங்கேறி இருக்கிறது...மீண்டும் நடனமாடியபோது திடீரென மயங்கி விழுந்த இளைஞர் மரணம்

தோழிகளுடன் நடனமாடி கொண்டிருந்த சுகைல், நடனத்திற்கு நடுவே பப்பில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு விட்டு பின்னர் மீண்டும் நடனமாடிய நிலையில்... திடீரென நிலை தடுமாறி மயங்கி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது....

முதற்கட்ட விசாரணையில் மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்ததாக தகவல்

செய்வதறியாத தவித்த நண்பர்கள், சுகைலை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது அனைவரையும் தூக்கி வாரிப் போட்டிருக்கிறது...

என்ன ஆனது ?, எதனால் உயிரிழந்தார்? என நண்பர்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்த நிலையில், இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்கள் பரபரப்பை மேலும் கூட்டி இருக்கிறது...

"நண்பர்களுடன் சாப்பிட வந்திருக்கிறார்"

"மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறுகின்றனர்"

தொடர்ந்து பேசிய உறவினர், சுகைல் சம்பவத்தன்று பப்பில் சாப்பிடவே இல்லை எனவும், 5 வேளையும் தவறாமல் தொழுகை செய்து ஒழுக்கத்துடன் வளர்ந்து வந்த அவரின் இந்த திடீர் மரணம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என மனம் கலங்கினார்...

"நல்ல பையன், 5 முறை தொழுது ஒழுக்கத்துடன் வளர்ந்து வந்தார்"

"சம்பவத்தன்று அவர் சாப்பிடவே இல்லை"

"உடல் நிலை மோசமாகும் அளவுக்கு எந்தவொரு அறிகுறியும் இல்லை"

இன்றை தலைமுறை இளைஞர்கள் படிப்புக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் வெளியூரில் தங்கி 3 வேலையும் கடை சாப்பாடு சாப்பிட்டு வரும் நிலையில், அவர்களை குறிப்பிட்டு ஓர் எச்சரிக்கை விடுத்தார்...

"இன்றைய தலைமுறையினர் 3 வேலையும் வெளியில்தான் சாப்பிடுகின்றனர்"

"எச்சரிக்கையுடன் இருங்கள்"

கல்லூரி நண்பர்களுடன் விடுமுறையை கழிக்க அவுட்டிங் வந்த இளைஞருக்கு நேர்ந்த இந்த துயரமும், இதன் பின்னணியும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்