சென்னை காலேஜ் வாசலில் வைத்து மாணவி குத்திக்கொலை... இளைஞருக்கு சரியான தண்டனை வழங்கிய நீதிமன்றம்

x

சென்னை மதுரவாயலைச் சேர்ந்த அஸ்வினி, கே.கே.நகரில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த அழகேசன், அஸ்வினியைக் காதலிப்பதாகக் கூறி தொந்தரவு செய்து வந்த நிலையில், கோபமடைந்த அஸ்வினி, அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், அழகேசனை கைது செய்தனர். ஜாமினில் வெளியில் வந்த அழகேசன் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் கல்லூரி வாயிலில் வைத்து அஸ்வினியை கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார். அழகேசனைக் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்... பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அழகேசன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியத்திலிருந்து அஸ்வினியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழுவுக்கு நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்