கல்லூரி மாணவியை இன்ஸ்டாகிராமில் மிரட்டிய மர்மநபர்-மன அழுத்தத்தில் இருந்த மாணவி, தூக்கிட்டு தற்கொலை

x

சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவி, திடீரென தன் அறைக்குள் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மர்மநபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் மிரட்டல் விடுத்திருந்தது தெரியவந்திருக்கிறது. இதனால், மன அழுத்ததிலிருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்