திடீரென அடித்து வந்த வெள்ளம்.. அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு

x

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவரிடம், காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களின் விவரங்கள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின், தொலைபேசி மூலம் உரையாடி நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்