சென்னையில் உயிரிழந்த சிறுமியை சிதைத்த கொடூரன்

x

போக்ஸோ வழக்கில் கடந்த மார்ச் மாதத்தில் கைது செய்யப்பட்ட 27 வயதான கார்த்திக் என்பவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு சிகிச்சை தேவைப்பட்டதால் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த மாதம் கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நான்கு நாட்களுக்கு முன் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று கார்த்திக் உயிரிழந்தார். இது குறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்