கழுத்து தொங்கி.. கண், வாய் திறந்து.. நடுங்கவிட்ட சென்னை சிறுமி மரணம்.. மர்மம்.. அதிர்ச்சி CCTV
சென்னை புழல் அருகே, 6 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், தாயின் கள்ளக்காதலனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பி.வி.காலனியை சேர்ந்த திவ்யா என்பவர், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து தனது 2 பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார். அரசியல் கட்சி பிரமுகர் வீட்டில் பணியாற்றி வந்த திவ்யாவிற்கும், உடன் பணியாற்றிய சீனிவாசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. திவ்யாவின் வீட்டிற்கு அடிக்கடி சீனிவாசன் சென்றுவந்த நிலையில், அவரது 6 வயது பெண் குழந்தையை சீனிவாசன் அடித்து துன்புறுத்தியதாக சுறப்படுகிறது. இதனிடையே, திவ்யா சீனிவாசனுடன் சென்னை புழல் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார். திவ்யா வேலைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டிற்கு வந்த சீனிவாசன், திடீரென 6 வயது சிறுமி குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கியதாகக் கூறி, சிறுமியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். இதனை அக்கம் பக்கத்தினர் விசாரித்தபோது, அவர் பதில் ஏதும் கூறாமல் சென்றது,ᨊ அங்கிருந்தவர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், சீனிவாசனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.