#JUSTIN || நடுரோட்டுக்கு வந்த மாற்றுத்திறனாளிகள்..அட்வைஸ் கொடுத்த சென்னை ஹை கோர்ட் | Chennai

x

பார ்வை மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையை அணுகும்படி சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

பார்வை மாற்று திறனாளிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், உரிய அனுமதியை பெறாமல் போராட்டங்களில் ஈடுபடுவதாக கூறி காவல்துறையினர் கைது செய்வதாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு

போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது அனைவருக்குமான உரிமை தான். அதை சட்டப்பூர்வமான முறையில் பயன்படுத்த வேண்டும் - உயர் நீதிமன்றம்

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்டதா? திடீரென சாலையில் அமர்ந்து யாரும் போராட முடியாது. காவல்துறையில் அனுமதி பெற வேண்டும் - உயர் நீதிமன்றம்

ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில், அவற்றை நடத்த அனுமதி கேட்டு காவல்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி மறுத்தால் நீதிமன்றத்தை நாடலாம் - உயர் நீதிமன்றம்

சட்டப்படி நடத்தப்படக்கூடிய ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டத்தில், காவல்துறையினர் அத்துமீறினால், அதில் நீதிமன்றம் தலையிடும் - தலைமை நீதிபதி சஞ்சய் கங்கப்பூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு


Next Story

மேலும் செய்திகள்