சென்னையில் அதிரடி மாற்றம்... ``மீறினால்..'' - அதிகாரிகள் அதிரடி

x

சென்னையில், பிளாஸ்டிக் தாளில் இட்லி வேக வைக்கும் உணவகங்கள் மீது அபராதம் மற்றும் சீல் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் தள்ளுவண்டி உணவகங்களும், சிற்றுண்டி கடைகளும் பிரதான அம்சங்களாக இடம்பிடித்துள்ளன. தட்டுகளில் வாழை இலை அல்லது மந்தார இலை கொண்டே உணவுகளை விநியோகிக்க வேண்டும் என்பது உள்பட பல விதிமுறைகள் வகுக்கப்பட்ட நிலையில்,


சில கடைகளில் பிளாஸ்டிக் தாளில் இட்லி வேக வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.


இட்லி, சாம்பார் ஆகியவற்றை கட்டித்தர பிளாஸ்டிக் பைகளையும், தட்டுகளின் மேலே பிளாஸ்டிக் பேப்பர், பட்டர்ஷீட் வைத்தே உணவுகளை பரிமாறுவதாகவும் கூறப்படுகிறது.


இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன.


இதுகுறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினா் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நேரடி ஆய்வில் ஈடுபட உள்ளனர்.


தவறுகள் கண்டறியும் பட்சத்தில் அதிக அபராதம் மற்றும் கடைகளின் உரிமத்தை ரத்து செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்