இந்தியாவிலேயே முதன்முறை... ``ஆத்மாக்களின் சங்கமம்..'' துயர நெஞ்சங்களுக்கு கைகொடுத்த மாநகராட்சி

x

தனியார் பங்களிப்புடன் பொதுமக்களுக்கு ஃப்ரீசர் பாக்ஸ்-ஐ சென்னை மாநகராட்சியே வாடகைக்கு விடும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

அன்புக்குரியவர்களை இழந்து துடிக்கும் அந்த நொடியில் மனமுடைந்து போனாலும், ஆக வேண்டிய காரியங்களை பார்க்க வேண்டும் என்ற சூழல் உருவாக, இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்வது அந்த துயரமான சூழலை சற்று கடினமாக்குகிறது..

இந்நிலையில், இதனை எளிமையாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றிணைந்து நவீன முயற்சியை மேற்கொண்டு வருகிறது..

சென்னை அண்ணா நகர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே புதிய ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மயானத்தில் flying squad என்ற தனியார் நிறுவனம் மூலம் இறந்த உடல்களை வைக்க வாடகை முறையில் குளிர் சாதன பெட்டிகள் வழங்கும் சேவையை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.

சுமார் 2 ஆயிரத்து 400 சதுர அடி நிலத்தில் 1 கோடி ரூபாய் செலவில் 12 உடல்கள் வைக்கும் வகையில் ஃப்ரீசர் பாக்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, டீப் ஃப்ரீசரில் உடலை வைத்திருக்க ஒரு நாளைக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கடந்த 4 மாதங்களில் 100 உடல்களை தகனம் செய்துள்ளதாக கூறும் தனியார் நிறுவனம், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் இறந்தவர்கள் உடல்கள் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கபடும் போது அங்குள்ள கேமரா மூலம் ஆன்லைனில் இறந்தவரின் உடலை பார்க்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்