ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் - ஜேசிபி எந்திரத்தை கற்களால் தாக்க முயன்றதால் பரபரப்பு

x

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

ஜேசிபி எந்திரத்தை கற்களால் தாக்க முயன்றதால் பரபரப்பு

#chennai #chengalpattu #home #damage #jcb #thanthitv #protest #thanthitv

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி 5 வீடுகள் இடிக்கப்பட்டதால், அங்கு குடியிருந்தவர்கள் அழுது புலம்பியபடி எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னையைச் சேர்ந்த கிரிதரன் என்பவரும், தற்போது வீடுகளை இழந்து நிற்பவர்களின் முன்னோரும், 35 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில் ஒன்றாக பணியாற்றியதாக கூறப்படுகிறது. கிரிதரன் சென்னைக்கு சென்று விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அந்த வீடு கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தனர். இதற்கிடையே, அந்த இடம் தனக்குச் சொந்தமானது என்று கூறி, வீடுகளை காலி செய்யுமாறு கிரிதரன் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் வீடுகளை காலி செய்யாததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உத்தரவு பெற்ற பிறகும், அவர்கள் வீடுகளை காலி செய்யாமல் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, போலீசார், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் உதவியுடன் 5 வீடுகளும் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. அப்போது, எதிர்ப்பு தெரிவித்து புலம்பிய ஒரு பெண் தரையில் புரண்டு அழுது மயக்கம் அடைந்ததால், ஆம்புல்சில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஜேசிபி எந்திரத்தை கற்களால் தாக்க முயன்ற ஒருவரை போலீசார் அழைத்துச் சென்று கைது செய்தனர். மேலும், எதிர்ப்பு தெரிவித்த மற்றவர்களையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்