சென்ட்ரல் அருகே லாட்ஜிக்குள் சரியான நேரத்தில் புகுந்த போலீஸ்.. நூலிழையில் ஹாட் நியூஸே மாறியிருக்கும்

x

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள தெற்கு ரயில்வேயில் இன்ஜினியராக பணியாற்றி வருபவர் ராம்பிரசாத். இவரை, கடந்த 2 நாள்களுக்கு முன்பு சைபர் கிரைம் போலீசார் பேசுவதாக கூறி மும்பையில் இருந்து மர்மநபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். ராம்பிரசாத் பெயரில் 30 லட்சம் ரூபாய் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்யப்பட்டிருப்பதாக அந்நபர்கள் கூறியதாக தெரிகிறது. கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் கைது செய்ய உள்ளதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், பயந்து போன ராம்பிரசாத், மோசடி கும்பல் கூறியதுபோலவே, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகேயுள்ள லாட்ஜ் ஒன்றில் இரு நாள்களாக அறையெடுத்து தங்கி இருக்கிறார். தொடர்ந்து அவரிடம் போலீசார் போல், வீடியோ காலில் கும்பல் விசாரணை நடத்தி பணம் பறிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கின்றனர். இதனிடையே, ராம்பிரசாத்தை காணவில்லை எனக்கூறி அவரது குடும்பத்தார் போலீசில் புகாரளித்த நிலையில், செல்போன் சிக்னல் மூலம் அவரை போலீசார் மீட்டிருக்கின்றனர். தொடர்ந்து, கவுன்சிலிங் கொடுத்து ராம்பிரசாத்தை அனுப்பி வைத்திருக்கும் போலீசார், மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்