சென்னை பிரபல பாரில் 3 வடமாநில நபர் செய்த அதிர்ச்சி காரியம் - CCTV பார்த்து அதிர்ந்த ஓனர்

x

சென்னையில் மதுபான பாரில், கியூ ஆர் ஸ்கேனர் மூலம் 5 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த ஊழியர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சென்னை கோயம்பேட்டில், தி.மு.க கவுன்சிலருக்கு சொந்தமான மதுபான பாரில் பணியாற்றி வந்த வடமாநிலத்தை சேர்ந்த மூன்று ஊழியர்கள், கடந்த ஆறு மாதங்களாக வாடிக்கையாளர்களிடம், ஹோட்டல் நிர்வாகத்தின் க்யூ ஆர் ஸ்கேனரை காண்பிக்காமல், தங்களது க்யூ ஆர் ஸ்கேனை காண்பித்து, சுமார் 5 லட்சம் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், ரெம்னன்சங், லுங்கோஜங், பாகோமாங் ஆகிய 3 ஊழியர்களையும் அடைத்து வைத்து மேலாளர் சையது சபருல்லா என்பவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட 3 ஊழியர்கள் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட பார் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்