தெற்காசியாவில் முதல் முறை...பிரமாண்டமாய் மோத போகும் நாடுகள்..சென்னைக்கு கிடைத்த மாபெரும் பெருமை..

x

தெற்காசியாவில் முதல் முறை...பிரமாண்டமாய் மோத போகும் நாடுகள்..சென்னைக்கு கிடைத்த மாபெரும் பெருமை.. ஃபார்முலா-4 கார் பந்தயம் இன்று தொடக்கம்

சென்னையில் ஃபார்முலா-4 கார் பந்தயம் இன்று தொடங்குகிறது. தெற்காசியாவிலேயே முதன்முறையாக இன்றும் நாளையும் ஃபார்முலா 4 இரவு நேர கார் பந்தயம் சென்னை தீவுத்திடல் பகுதியில் நடைபெறவுள்ளது. இதன் மூலம் தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரம் என்ற பெருமையை சென்னை பெறவுள்ளது. சுமார் மூன்றரை கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் இந்த கார் பந்தயம் நடத்தப்பட உள்ளது. இந்த சர்க்யூட்,, தீவு திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் அமைந்துள்ளது. கார் பந்தயத்தில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில், பந்தயத்தையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்