சென்னை சாலையில் சொகுசு காரில் அரசியல் பிரமுகரின் மகன் செய்த காரியம்.. வைரலானதும் பாய்ந்த ஆக்‌ஷன்

x

சென்னை அடுத்த மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் வாகனத்தை இயக்கியதாக திமுக பிரமுகரின் மகனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சொகுசு கார்களில் புழுதி பறக்க வட்டமடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. விசாரணையில் சோழவரம் திமுக வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சுந்தரமூர்த்தி - சோழவரம் ஊராட்சி ஒன்றிய 3வது வார்டு கவுன்சிலர் கனிமொழி ஆகியோரது மகன் நவீன் காரை அபாயகரமாக ஓட்டியது தெரியவந்தது. இதனையடுத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார், திமுக பிரமுகர் நவீன் மற்றும் அவரது நண்பர்களை எச்சரித்து அனுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்