வேளச்சேரியில் காரை ஜவுளி கடைக்குள் விட்ட நபர் - "தெரியாம இல்ல தெரிஞ்சே தான்"
சென்னை வேளச்சேரியில் ஜவுளி கடைக்குள் காரை ஏற்றி சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வேளச்சேரி தொகுதியின் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் செப்ஸ்டின் என்பவர் பேருந்து நிலையம் அருகே துணிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் எதிரே துணி கடை நடத்தி வரும் சிவகுமார் எனபவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்துள்ளது. தீபாவளி விற்பனை மந்தமாக இருந்ததால் கோபமடைந்த சிவக்குமார், தனது காரில் ஜெபஸ்டின் கடை முன்பு வந்தார். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் காரை வேகமாக இயக்கி கடையை சேதப்படுத்தினார். இந்த காட்சிகள் வைரலாகி உள்ள நிலையில், சிவகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story