ஓடிக்கொண்டிருந்த பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம் | Chennai
சென்னை அயனாவரத்தில் பேருந்து ஓடிக் கொண்டிருக்கும்போது ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதூரில் இருந்து தங்க சாலை நோக்கி மாநகரப் பேருந்தை ஓட்டுநர் செந்தில் குமார் இயக்கிய நிலையில் அயனாவரம் குன்னூர் ஹை-ரோடு வழியாக வரும்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. வலது புறமாக உள்ள தடுப்பு சுவரில் பேருந்தை மோதி உடனடியாக நிற்க செய்தார். பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்துடன் அவசர அவசரமாக கீழே இறங்கினர். நடத்துநர் மோசஸ் மற்றும் பயணிகளில் சிலர் செந்தில்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து சுவரில் மோதி நின்ற போது பக்கவாட்டில் இருந்த ஆட்டோ பலத்த சேதமடைந்தது. போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story