சென்னை பெசன்ட் நகரில் நடந்த பயங்கரம் - காரில் சென்ற இரு பெண்கள்.. துடிதுடித்த இளைஞன்
சென்னை பெசன்ட் நகரில் நடந்த பயங்கரம் - காரில் சென்ற இரு பெண்கள்.. துடிதுடித்த இளைஞன்
சென்னையில், போதை காரணமாக சாலையில் படுத்திக்கிடந்த இளைஞர் மீது கார் ஏறி இறங்கியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெசன்ட் நகர் ஓடக்குப்பம் பகுதியை சேர்ந்த சூர்யா, பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். 22 வயதான இவர், கலாஷேத்ரா காலணி, வரதராஜ் சாலை நடைபாதை அருகே போதையில் கிடந்துள்ளார். அவர் மீது அவ்வழியே வந்த கார் ஒன்று ஏறி இறங்கியுள்ளது. இதனையடுத்து காரில் வந்த இரு பெண்களில் ஒருவர் காருடன் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார். மற்றொரு பெண் அப்பகுதி மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு, அந்த இடத்தை விட்டு சென்றார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூர்யா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் வரை, சூர்யாவின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறி, சாஸ்திரிநகர் காவல்நிலையத்தில் திரண்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்த நிலையில், அவர்கள் திரும்பி சென்றனர்.