அம்மாவை ரூமுக்குள் வைத்து பூட்டி அலறிய குழந்தை.. சென்னையில் திக்.. திக்.. சம்பவம்
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த பிலாலுதீன், யாஸ்மின் பாத்திமா தம்பதியினர் 2 வயது குழந்தையுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பிலாலுதீன் வேலைக்கு சென்றுவிடவே, குழந்தை வெளியே செல்லக்கூடாது என்பதற்காக வாசல்கதவை பூட்டிவிட்டு யாஸ்மின் உள்ளறையில் இருந்துள்ளார். இந்நிலையில் யாஸ்மின் இருந்த அறையின் கதவை, குழந்தை தெரியாமல் வெளிப்பக்கம் பூட்டியதாக கூறப்படுகிறது. இதனால் உள்ளறைக்கும் செல்ல முடியாமல், வெளியேயும் செல்ல முடியாமல் குழந்தை பயத்தில் அழுததாக கூறப்படுகிறது. இதையடுத்து உள்ளறையில் இருந்த யாஸ்மின் செல்போன் மூலம் கணவரை அழைத்துள்ளார். பிலாலுதீன் அளித்த தகவலின் அடிப்படையில் உடனடியாக விரைந்த தீயணைப்பு துறையினர், 15 நிமிடம் போராடி பூட்டை உடைத்து குழந்தையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
Next Story