"நிம்மதியா வாழனும்னு பிளாட் வாங்கினேன்..குடும்பத்துக்கே பெரும் மன உளைச்சல்..எல்லாமே சிதைந்து போச்சு"
நடிகர் ஹரிஸ் கல்யாணின் பார்க்கிங் படத்தை மிஞ்சும் வகையிலான மோதல் சம்பவம் ஒன்று சென்னை, சாலிகிராமத்தில் அரங்கேறி இருக்கிறது. விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
சென்னை சாலிகிராமம் எம்ஜிஆர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்... புதிதாக வீடு வாங்கி குடியேறிய எழில் என்பவரின் குமுறல்தான் இது...
எழிலுக்கு ஒதுக்கப்பட்ட கார் பார்க்கிங்கில், அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அருண் என்பவர், காரை நிறுத்திக் கொண்டு, நடிகர் ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் பட பாணியில் இடையூறு கொடுப்பதாக கூறப்படுகிறது...
பார்க்கிங் பட சம்பவத்தை விட உச்சகட்டமாக, சம்பந்தப்பட்ட இடத்தில் எழில் காரை நிறுத்தி விடக் கூடாது என்பதற்காக, சுமார் 6 மாதங்களாக தன் காரை அருண் வெளியவே எடுக்கவில்லையாம்...
இதனால், கண் கொத்திப் பாம்பாய் பார்க்கிங்கை நோட்டமிட்டு வந்த எழில், காரை அருண் வெளியே எடுத்த சமயம் பார்த்து தன் காரை நிறுத்தியிருக்கிறார்..
இதில், காரை வெளியில் எடுத்தால் மீண்டும் அருண் அவர் காரை நிறுத்தி விடுவார் எனக் கூறி தற்போது வரை 4 மாதங்களாக தன் காரை வெளியில் எடுக்கவில்லை என்கிறார்...
தான் புகாரளித்தபோது, சிவில் கேஸ் எனக்குறி கைவிரித்த விருகம்பாக்கம் போலீசார், தற்போது அருணின் புகாருக்கு தன்னை காவல்நிலையம் அழைத்து மிரட்டுவதாக குற்றம் சுமத்தி இருக்கிறார்..
இதனிடையே, சுமார் 10க்கும் மேற்பட்ட கும்பல், சம்பந்தப்பட்ட கார் பார்க்கிங்கில் இருந்து தன் காரை உடைத்து வெளியே கொண்டு வந்த சாலையில் கிடத்திச் சென்றதாக வீடியோ ஆதாரத்துடன் குற்றம் சுமத்தி இருக்கிறார்...
மோதலும், புகாரும், போலீசார் மீதான குற்றச்சாட்டுமென பார்க்கிங் படத்தை மிஞ்சும் வகையிலான இந்த சம்பவம் சென்னை, சாலிகிராமத்தை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது...