சென்னை ஏர்போர்ட்டில் விசித்திர பொருள்?.. ஓனர்களை தூக்கிய அதிகாரிகள்
சென்னை விமான நிலையத்தில், தடைசெய்யப்பட்ட சாட்டிலைட் போன் கொண்டுவந்ததாக, இரண்டு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து சேலம் செல்லும் விமானத்தில் உள்ள பயணிகளிடம், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது, ரஷ்யாவை சேர்ந்த ஒரு நபரும், தெலங்கானாவை சேர்ந்த மற்றொரு நபரும், வித்தியாசமான செல்போன்களை வைத்திருந்தனர். இவை தடைசெய்யப்பட்ட சாட்டிலைட் போன் என மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சந்தேகப்பட்டனர். இதனையடுத்து, அவர்கள் இருவரின் விமான பயணத்தையும் ரத்து செய்து, விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இது சாட்டிலைட் போன் இல்லை... விலை உயர்ந்த வெளிநாட்டு செல்போன் என இருவரும் கூறினர். இருப்பினும் அவர்கள் இருவரிடமும், சென்னை விமான நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story