சென்னையில் கால் வைத்ததும் மாயமான இளைஞர்.. நடந்தது என்ன?
கடலூர் மாவட்டம் தொலர் கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி என்பவரது மகன் பெரியசாமி, 7 மாதங்களுக்கு முன் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். 10 நாட்களுக்கு மேலாக பெரியசாமியின் செல்போன் அனைத்து வைக்கப்பட்டு இருந்ததால் சிங்கப்பூர் நிறுவனத்தை சங்கிலி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதற்கு கடந்த 10 ஆம் தேதியே பெரியசாமி சென்னைக்கு வந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 10ஆம் தேதி சென்னை வந்த பெரியசாமி விமான நிலையத்தில் சுங்க சோதனை அனைத்தையும் முடித்துவிட்டு வெளியில் சென்றுள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மாயமான பெரியசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story