சென்னை ஏர்போர்ட்டில் 3 நாட்களாக தங்கிய தம்பதி.. தகவல் தெரிந்த உடன் உதவிக்கரம் நீட்டிய அமைச்சர்

x

சென்னை விமானநிலையத்தில் 3 நாட்கள் தவித்த வங்கதேசத்தை சேர்ந்த வயதான தம்பதி சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வங்கதேச வன்முறையை தொடர்ந்து, அங்கு இயக்கப்பட இருந்த விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் வங்கதேசத்தை சேர்ந்த வயதான தம்பதி சுசில் ரஞ்சன் - புரோவா ராணி 3 நாள் விமானநிலையத்தில் பரிதவித்தனர். தகவல் அறிந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு வயதான தம்பதிக்கு உதவிக்கரம் நீட்டினார். வயதான தம்பதி விடுதியில் தங்க வைக்கப்பட்டதோடு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுசில் ரஞ்சன் மனைவிக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இன்றைய தினம், சென்னையில் இருந்து வங்கதேசம் செல்லும் விமானம் மூலம் வயதான தம்பதி சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்