ஒரு நாள் இரவில் சென்னை மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரிப்போர்ட்
ஒரு நாள் இரவில் சென்னை மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரிப்போர்ட்
சென்னை மாநகரில் காற்றின் தரக்குறியீடு மோசமான நிலையிலிருந்து மிதமான நிலைக்கு திரும்பியுள்ளது. அதிகாலை 4 மணி நிலவரப்படி 168 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளது.தமிழகம் முழுவதும் காற்று தர குறியீட்டு அளவை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.அதன்படி, சென்னை ஆலந்தூரில் 246 ஆகவும், பெருங்குடியில் 230 ஆகவும், வேளச்சேரியில் 226ஆகவும் காற்றின் தரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, அரும்பாக்கத்தில் 163 ஆகவும், மணலியில் 133ஆகவும், கொடுங்கையூரில் 107ஆகவும், ராயபுரத்தில் 74 ஆகவும் காற்று மாசு பதிவாகியுள்ளது.சென்னையில் சராசரியாக 168 என்ற அளவில் தரக்குறியீடு பதிவாகியுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.சென்னைக்கு அடுத்தபடியாக, கும்மிடிப்பூண்டியில் காற்றின் தரம் 236ஆகவும், செங்கல்பட்டில் 170ஆகவும், கோவை பிஎஸ்ஜி கல்லூரி பகுதியில் 140ஆகவும், வேலூரில் 140ஆகவும், ராணிப்பேட்டையில் 132ஆகவும், சேலத்தில் 131ஆகவும், காற்று மாசு பதிவாகியுள்ளது.