ரூ.50,000 கடனை அடைக்க சென்னை வந்த கணவன் துடிதுடித்து பலி... 5 பிள்ளைகளோடு அனாதையாக கதறும் மனைவி
சென்னை தாம்பரம் அருகே காய்கறி வாகனம் மோதிய விபத்தில் ஒப்பந்த துப்புரவு பணியாளர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் உறைய வைத்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த தர்மண்ணா - அனிதா தம்பதி, 5 குழந்தைகளுடன் தாம்பரம் கடப்பேரி பகுதியில் தங்கி, ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணி செய்து வந்தனர். இன்று பணியில் ஈடுபட்டிருந்த போது அதி வேகமாக வந்த காய்கறி வாகனம் மோதியதில் தர்மண்ணா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 2 துப்புரவு தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தர்மண்ணா உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுத நிகழ்வு காண்போரின் கண்களை கலங்க வைத்தது. சொந்த ஊரில் வாங்கிய 50 ஆயிரம் கடனை அடைப்பதற்காக, சென்னைக்கு பிழைக்க வந்த இடத்தில் கணவனை பறிக்கொடுத்து நிற்கும் பெண்ணுக்கு உதவ வேண்டும் என சக தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.