திருந்தி வாழ நினைத்த மகன் மரணம்...கையறு நிலையில் கதறிய பெற்றோர் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

x

சென்னை அம்பத்தூரில் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருந்த இளைஞர் மர்மமான முறையில் இறந்ததாக கூறி, உறவினர்கள், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை நந்தனத்தைச் சேர்ந்த சசிகுமார், 10 ஆண்டுகளாக மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் அவருடைய பெற்றோர், அம்பத்தூரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த ஜனவரி மாதம் சேர்த்துள்ளனர். கடந்த 4-ஆம் தேதி பிரார்த்தனையின்போது, சசிகுமார் மயங்கி விழுந்ததாகவும், அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும், போதை மறுவாழ்வு மைய நிர்வாகி, சசிக்குமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சசிகுமாரின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது, சிகிச்சை அளிப்பதற்கு முன்பே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சசிகுமாரின் உடல், பிரேத பரிசோதனைக்காக, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்காமல் சசிகுமாரின் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சசிகுமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், போதை மைய நிர்வாகிகள் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்