கடற்கரையில் பட்டம் விடும் திருவிழா.. "மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தபடுவீங்க"

x

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை கடற்கரை பகுதியில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியது. ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை 4 நாள் நடைபெறவுள்ள விழாவில், எட்டுக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட பட்டங்கள் பறக்கவிடப்பட உள்ளன. முதல்நாளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மூவர்ணக் கொடியிலான பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. டால்பின்கள், ஜல்லிக்கட்டு காளை, டெட்டிபியர், மீன்கள், ஆக்டோபஸ் என ஏராளமான பட்டங்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்