முடியப்போகும் விடுமுறை.. சென்னையின் நுழைவுவாயில்.. இப்பவே இப்படியா..?

x

தொடர் விடுமுறை காரணமாக தென் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி வரும் மக்களால் பரனுர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வார இறுதி நாட்களில் தென் மாவட்டத்திலிருந்து சென்னையில் பணிபுரியும் மக்கள் தென் மாவட்டத்தை நோக்கி சென்று உள்ளனர். நாளை திங்கட்கிழமை என்பதால் சென்னைவாசிகள் அனைவரும் தென் மாவட்டத்திலிருந்து ஒரே நேரத்தில் சென்னையில் நோக்கி படையெடுத்தனர்

இதனால் பரனூர் சுங்கச்சாவடி அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுங்கச்சாவடியை கடந்து செல்ல 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் நிலவியதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்