`யோக ஸ்ரீ'.. பேர பாத்தாலே உஷாரா இருந்திருக்க வேணாமா மக்களே?..மூட்டை மூட்டையாக தங்கம்,வெள்ளி,பணம்

x

யோக ஸ்ரீ'.. பேர பாத்தாலே உஷாரா இருந்திருக்க வேணாமா மக்களே?..மூட்டை மூட்டையாக தங்கம்,வெள்ளி,பணம் - செங்கல்பட்டை அலறவிட்ட சம்பவம்

ஏலச் சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில் மூன்று பேரை கைது செய்த போலீசார், 270 சவரன் நகை, 20 கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், யுவஸ்ரீ ஃபைனான்ஸ், யோகஸ்ரீ ஃபைனான்ஸ், ஏ.கே. ஜுவல்லரி என பல்வேறு நிதி நிறுவனங்கள் மூலம் ஏலச் சீட்டு நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதில் சுமார் 120 பேருக்கு 8 கோடி ரூபாய் பணத்தை திருப்பி வழங்காமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பாபு, ஆனந்தன் ஆகியோரை கைது செய்தனர். இதனிடையே அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தனிப்படை போலீசார் மேற்கொண்ட சோதனையில், 270 சவரன் நகை, 20 கிலோ வெள்ளி,

22 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்