`என்ன கோரஸ் மிஸ் ஆகுது' - "என்ன காரணம் என்றே சொல்லல" - செங்கல்பட்டில் சுவாரஸ்யம் | Chengalpattu
- செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் வீராசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சிமன்ற தலைவர் வீராசாமி சரிவர எந்த பணிகளையும் செய்வதில்லை எனவும், கவுன்சிலர்கள் செய்யும் பணிகளுக்கு தனது பெயரை போட்டுக் கொள்வதாகவும், வரி ஏய்ப்பு செய்வதாகவும் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். முன்னதாக போராட்டத்தில் ஒருவர் மட்டும் ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக கோஷம் எழுப்பிய நிலையில், பதாகைகள் ஏந்தி நின்ற பொதுமக்கள் அமைதி காத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், என்ன காரணம் என்றே சொல்லாமல் தங்களை கூட்டத்திற்கு அழைத்து வந்ததாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story