7500 கிலோ கஞ்சா எரிப்பு - அதிரடி காட்டிய செங்கல்பட்டு போலீசார்

x

இன்று உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் பணி நடைபெற்றது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கம் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 6,500-கிலோ கஞ்சா மற்றும் வடக்கு மண்டல காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 956-கிலோ கஞ்சா என மொத்தம் 7500-கிலோ கஞ்சா அழிக்கும் பணி நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்