யாரோ ஒருவரின் அலட்சியத்துக்கு அப்பாவி பலிகடா.. இந்தியர் என்ற அடையாளமே அழிந்த சோகம்

x

மின்வாரிய ஊழியர்களின் சிறு அலட்சியம், மீனவர் ஒருவரின் வாழ்க்கையை புரட்டி போட்டு அவரை கதிகலங்க செய்திருக்கிறது. விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பு..


இழப்பின் தவிப்பிலும், செய்வதறியாத விரக்தியின் விளிம்பிலும் நிற்கிறார் இந்த மீனவர்...

மீன் பிடித் தொழிலில் சிறுக சிறுக சேர்த்த சுமார் 7 லட்ச ரூபாய் பணத்தையும், ஆதார், ரேஷன் , மீன்வளத்துறையின் உறுப்பினர் அட்டை மற்றும் பிற முக்கிய ஆவணங்கள் என அனைத்தையும் நெருப்புக்கு பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கிறார்...


அத்தனைக்கும் மின்வாரிய ஊழியர்களின் சிறு அலட்சியம்தான் என குமுறுகிறார் இவர்...

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு மீனவர் குப்பத்தை சேர்ந்தவர்தான் இந்த 62 வயது முதியவர் கேசவராமன்...

குப்பத்தில் உள்ள வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் மின்சாரத்தில், திடீரென மின்சாரம் உயர் அழுத்தமாகவும், தாழ்வழுத்தமாகவும் மாறி மாறி வந்து மக்களை படுத்தி வைத்திருக்கிறது..

இது குறித்து பல முறை மின்வாரிய ஊழியர்களிடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படும் நிலையில், இதன் விளைவாய் கேசவராமனின் குடிசை வீட்டில் திடீரென ஏற்பட்ட மின் விபத்தின் எதிரொலிதான் இது...

மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு அரசு வழங்கும் ஜி.பி.எஸ் கருவியுடன், தான் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த 7 லட்ச ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் என அனைத்தையும் தீ விபத்தில் இழந்திருக்கிறார்..


மனமுடைந்து போய், செய்வதறியாது தவித்த மீனவர், தான் இழந்த பொருள்களுடன் நீதி கேட்டும், மின்வாரிய ஊழியர்கள் மீது குற்றம் சுமத்தியும் மாமல்லபுரம் காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்