கத்தியை காட்டி மிரட்டி சிறுவர்களை பாலியல் வன்முறை செய்த இளைஞர்.. செங்கல்பட்டில் அதிர்ச்சி - அதிரவிடும் சிசிடிவி

x

செங்கல்பட்டில் சிறுவர்களை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர், போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

பாண்டிச்சேரி ரெட்டியார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் அமீர் அப்துல் காதர். இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு சக்கர வாகன திருட்டு, வழிப்பறி ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தார். மேலும், சிறுவர்களை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்முறையிலும் ஈடுபட்டுள்ளார். இந்த புகார்களின் பேரில், இவரை தீவிரமாக தேடி வந்த போலீசார், தாம்பரம் அருகே கைது செய்தனர். காவல்நிலையத்தில் கழிப்பறைக்குள் வழுக்கி விழுந்த அவருக்கு, காலில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்