காற்றை கிழித்துக்கொண்டு பறந்த கார்.. சோதனை செய்த போலீசுக்கு கிடைத்த அதிர்ச்சி | Chengalpattu
சில தினங்களுக்கு முன், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் புறவழிச்சாலையில் அதிவேகமாக சென்ற காரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது டிக்கியில் வைக்கப்பட்டு இருந்த 2 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காரின் உரிமையாளர் சாந்தோம் பகுதியை சேர்ந்த காமராஜ் பால் என்பரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது , தன்னை சென்னை ரைபிள் கிளப் உறுப்பினர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட காமராஜ் பால், துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு செல்வதாகவும் தெரிவித்தார். அதற்கான ஒரிஜினல் ஆவணங்களை காண்பித்துவிட்டு துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ள போலீசார் அறிவுறுத்திய நிலையில் 4 நாட்கள் ஆகியும் காமராஜ் பால் வராததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story