செம்பரம்பாக்கம் ஏரி.. களத்தில் இறங்கிய மத்திய அரசு
செம்பரம்பாக்கம் ஏரியை, மழைமானி கருவி வைத்து மத்திய அரசு கண்காணித்து வருகிறது.
வெள்ள பாதிப்புக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரத்தை மத்திய அரசு கவனித்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியில் மூன்று இடங்களில் நவீன கருவிகளை வைத்து மத்திய அரசு கண்காணித்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் வியூ பாயிண்ட் என சொல்லக்கூடிய பகுதியில் மழையின் அளவை கண்காணிக்க கருவியும், அதன் அருகிலேயே ஏரி நீரின் ஆழம் மற்றும் அதில் ஏதாவது ரசாயன மற்றும் கழிவுகள் கலக்கிறதா என கண்டறியப்பட்டு வருகிறது. இந்த கருவிகளை வைப்பது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தகவல் மட்டும் தெரிவித்து விட்டு நேரடியாக அந்த கருவிகள் மூலம் அவர்களே கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story