சென்னை கோயம்பேட்டில் மாறிய இடம்...வேதனையில் மக்கள்
சென்னை கோயம்பேட்டில் ஆயுத பூஜை பண்டிகை கால சிறப்பு சந்தை இடமாற்றம் செய்யப்பட்டதால், தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகளும், விவசாயிகளும் வேதனை தெரிவித்துள்ளனர். வருடந்தோறும் கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில், ஆயுத பூஜைக்கான சிறப்பு சந்தை அமைக்கப்படும். ஆனால் இந்த வருடம், சிறுதானிய விற்பனை அங்காடியில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டது. இந்தநிலையில், சந்தை இடமாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் வரவில்லை எனவும், இதனால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். விற்பனையாகாத பூசணிக்காய், வாழை கன்றுகளை வியாபாரிகள் கீழே கொட்டி சென்ற சம்பவமும் அரங்கேறியுள்ளது
Next Story