சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மூலம் நிலவில் முத்திரை பதித்த திருச்செந்தூர்

x

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆய்வு செய்து வருகின்றன. அவற்றில், லேசர் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய எல்.பி.ஜி. பிளேட், வேகத்தை கட்டுப்படுத்தக்கூடிய சர்வோ ஆக்‌ஸிலரோ மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கான உதிரி பாகங்கள், திருச்செந்துரை அடுத்த நாசரேத் பகுதியில் செயல்படும் ஆர்ட் தொழிற் பயிற்சி மையத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மையம், 38 ஆண்டுகளாக, விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்குகிறது. சந்திரயான் - 3 திட்டத்தின் சாதனையில், தாங்களும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக, தொழிற் பயிற்சி நிறுவனத்தினர் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்