ரயில் நிலையத்தில் பெண் தாலியை அறுத்த கொடூரன் - அடுத்த நொடியே அதிரடி காட்டிய காவல்துறை
சேலம் மாவட்டத்தை சேர்ந்த சித்ரா என்பவர், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலம் சென்றுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் வந்து நின்றிருக்கிறது. அப்போது, கேரளாவை சேர்ந்த அனஸ் என்ற இளைஞர், சித்ராவின் 7 சவரன் தாலிச் சங்கிலியை பறித்து ஓடியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உடனே, ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் பொதுமக்களின் உதவியுடன் இளைஞரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், இளைஞர் மீது திருட்டு, வழிப்பறி என தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவர, இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்....
Next Story