"மோசடி அழைப்புகளை தடுக்க வேண்டும்" - மத்திய அரசு அதிரடி உத்தரவு
தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியர்களிடம் இந்திய குறியீட்டு எண்களை காட்சிப்படுத்தி, சைபர் கிரைமில் சர்வதேச மோசடி கும்பல் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்புகள், இந்தியாவில் இருந்து வருவது போன்று குறியீட்டு எண்ணை கொண்டிருக்கும்... ஆனால், அவை சர்வதேச மோசடி கும்பலால் குறியீட்டு எண் மாற்றப்பட்டவை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இவற்றை தடுக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்புத்துறை இணைந்து வழிமுறையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச மோசடி அழைப்புகளை சேவை நிறுவனங்கள் தடுக்க வேண்டும் என தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பல்வேறு நடவடிக்கைகளையும் மீறி, மோசடி அழைப்புகள் வந்தால், சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.