மத்திய அரசின் பரிசு" - முன்னாடி வரவேண்டிய மானியமே வரல" - உஜ்வாலா திட்ட பயனாளர்கள் வேதனை
மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்திருக்கும் நிலையில், உஜ்வாலா திட்ட பயனாளர்கள் தங்களுக்கு மானியம் கிடைப்பது இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ஏற்கனவே 200 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இப்போது 200 ரூபாய் விலை குறைப்பால் அவர்களுக்கு 400 ரூபாய் குறைந்து 713 ரூபாய்க்கு சிலிண்டர் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. பிற இணைப்புகளுக்கு மானியம் 2020 ஜூன் மாதமே நிறுத்தப்பட்டாலும் உஜ்வாலா திட்ட பயனாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உஜ்வாலா திட்ட பயனாளிகளிடம் பேசிய போது, சிலிண்டர் விலை குறைப்பு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். ஆனால், மத்திய அரசு வழங்கும் 200 ரூபாய் மானியம் கிடைப்பது இல்லை என வேதனைதெரிவித்தனர்.